• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இத்தாலியில் ஆபத்தான நிலையில் இலங்கை இளைஞர்..! வெளியான காரணம்

இலங்கை

இத்தாலியில் வசிக்கும் இலங்கை இளைஞர் ஒருவர், மிலான் (Milan) நகரிலிருந்து வெரோனா (Verona) நகரம் வரை ஏறக்குறைய 160 கிலோமீட்டர் தூரம் உணவு மற்றும் தண்ணீர் இன்றி நடந்து சென்று உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒக்டோபர் 18, 2026 அன்று, அதிகாலை சுமார் 2:40 மணியளவில், இத்தாலியின் பிரெஷியா மாகாணத்தில் உள்ள கொன்செசியோ நகரில் வீதியில் விழுந்து கிடந்த நிலையில் அவ்வழியே சென்ற ஒருவரின் அவசர அழைப்பின் விளைவாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கடுமையான நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கோமா நிலைக்கு அருகில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அவரது தோல் வெளிறி, உதடுகள் வறண்டு, நிற்கக்கூட முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்ததாகவும் இத்தாலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் சட்டப்பூர்வமாக வசிப்பதற்கான அனுமதி பெற்றுள்ள, எந்தவொரு குற்றப்பதிவும் இல்லாத இந்த இளைஞன் வேலை தேடி அந்நாட்டிற்கு வந்துள்ளார்.

அவர் சமீபத்தில் இலங்கையிலிருந்து மிலான் விமான நிலையம் வழியாக இத்தாலிக்கு வந்துள்ளார்.

வேலை இல்லாததால் கையில் பணமின்றி வெரோனா நகரில் வசிக்கும் தனது காதலியைப் பார்க்கும் நோக்கத்தில் மிலனிலிருந்து இந்த கடினமான பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஒக்டோபர் 16 ஆம் திகதி காலையில் புறப்பட்டு, 24 மணி நேரத்திற்கும் மேலாக உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. மற்றொரு அறிக்கை, அவர் தனது பயணத்தின் முதல் நாளிலேயே நோய்வாய்ப்பட்டதாகக் கூறுகிறது.

இருப்பினும், இத்தாலிய ஊடகங்கள் இதை ஒரு "காதல் பயணம்" என்று பரவலாக செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், காதலியும் இலங்கையை சேர்ந்த பெண் என்பதை அந்நாட்டில் உள்ள இலங்கை சமூகம் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.

அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் இளைஞனுக்கு உதவ அந்நாட்டு மக்கள் பெருமளவில் முன்வந்துள்ளனர்.
 

Leave a Reply