• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கை

இலங்கைக்கு அண்மையாக உருவான குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது மேற்கு திசையில் நாட்டை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைசெய்திகள்

எவ்வாறாயினும், இந்தத் தொகுதியின் தாக்கம் நாளையும் தொடர்ந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, நாளைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய, வட மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்,

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்.

இதேவேளை,  நாளை (23) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் மற்றுமொரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பின்னர் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 

Leave a Reply