• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழக பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் ரஜினிய்ன் ஜெயிலர் 2

சினிமா

Jailer 2 Tamilnadu Bo: தமிழக மக்கள் தலையில் வைத்து கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் வெளியாகிவிட்டது.

முதல் பாகத்தில் நடித்த பலரும் நடிக்க, சில புதிய கலைஞர்களும் இடம்பெற ஜெயிலர் 2 கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியாகி இருந்தது.

முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட படங்களை கொடுத்த சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். நமோ நாராயணா, யோகி பாபு நகைச்சுவை காட்சிகள், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் என முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் படம் என்றாலே பாக்ஸ் ஆபிஸை திணறடிக்கும், இந்த ஜெயிலர் 2 படமும் அமோக விமர்சனங்களை பெற்றுள்ளது.

எனவே சொல்லவே வேண்டாம், வசூல் தெறிக்கும். இப்போது விடுமுறை நாட்கள் வேறு படத்திற்கான வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

படம் வெளியாகி 6 நாள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 134 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 
 

Leave a Reply