வெள்ளை மாளிகை பெண் உதவியாளர்களுக்கு லட்சக்கணக்கான பணத்தை பரிசாக வழங்கிய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் தனது 3 பெண் உதவியாளர்களுக்கு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாகப் பெருந்தொகையை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது
வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்துள்ள ஆண்டு சொத்து விவர அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
வெள்ளை மாளிகையின் சிறப்பு மற்றும் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் நட்டாலி ஹார்ப், ஊடக ஆலோசகர் மார்கோ மார்ட்டின் மற்றும் ஓவல் அலுவலக துணை இயக்குனர் சேம்பர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவருக்கும் இந்திய மதிப்பில் தலா ரூ.45 லட்சத்தை டிரம்ப் ரொக்கமாக வழங்கியுள்ளார்
வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி இவர்கள் மூவரும் ஆண்டுக்கு தலா ரூ.1.35 கோடி சம்பளமாக பெற்று வருகின்றனர். ரூ.45 லட்சம் பரிசுத்தொகை அவர்களின் ஆண்டுச் சம்பளத்தில் சுமார் 30 சதவீதத்திற்கு சமமாகும்.
விளக்கம் பரிசுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ட்ரம்ப் தொழில் அதிபராக இருந்த காலத்திலிருந்தே, தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் சொந்தப் பணத்திலிருந்து பரிசுகளை வழங்குவது அவரது வழக்கமான ஒன்றாகும்.
இந்தப் பரிசுகள் முழுமையாகவும் அவரது சொந்த நிதியிலிருந்தே வழங்கப்பட்டுள்ளன. அரசுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.





















