வழமைக்கு திரும்பிய ஹட்டன் – கொழும்பு வீதி போக்குவரத்து
இலங்கை
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் குயில் வத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு பாரிய அளவில் மண் திட்டுகள் சரிந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த மண்மேடு அகற்பட்டு தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்த பகுதியில் வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து, பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிவுகள், நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன இதனால் பாதிப்புக்குள்ளான வீதிகளை உரிய முறையில் சீரமைக்கும் வரை அந்த வழியில் செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















