யாழில் கொடூரம் - தொடருந்து பாதையில் படுத்திருந்து பாடல் கேட்ட தந்தைக்கு நேர்ந்த விபரீதம்
இலங்கை
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக தொடருந்து பாதையில் "ஹெட் செட்" அணிந்து பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்த வேளை விபத்து பதிவாகியுள்ளது.
அதில் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரை அங்கிருந்து மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






















