வீரகெட்டிய பகுதியில்துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
இலங்கை
வீரகெட்டியவின் அக்ரஹேர பகுதியில் இன்று காலை (14) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் 20 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் வீரகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தங்கல்ல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பன்றியை நோக்கிச் சுடப்பட்ட தோட்டா இளைஞர் மீது பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























