• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ஏசி அறையை செட் பண்ணி கொடுத்த ஏவிஎம் செட்டியார் ....

சினிமா

ராமாவர தோட்டத்தில் எம்.ஜி.யார் ., அவர்களுக்கு என்று ஒரு சூப்பர் ஏ. சி. அறையை சிறப்பாக அமைத்து கொடுத்தவர் ஏ. வி.எம்.செட்டியார்..அதை பராமரிக்க கோபால் என்பவரையும் அவரே வாத்தியார் வசம் சேர்த்து விடுகிறார்.

கோபால் ஒரு தீவிர பாகவதர் ரசிகர்...தலைவர் யூனிட்டில் தொடர்கிறார் கோபால்... எங்கள்தங்கம் படத்தில் ஒரு காட்சியில் 10.கிலோவாட் லைட் மூலம் 11000 கிலோ வாட் ஓளி தலைவர் மீது விழும்.அந்த காட்சியில் எலெட்ரீசியன் கோபால் கண்கள் கூச அவருக்கு ஒரு சிறப்பு கூலிங் கண்ணாடியை வாங்கி தருகிறார் பொன்மனம்.அப்படி கூட இருப்பவர்களுக்கு பார்த்து பார்த்து உதவினார் எம்ஜியார்...

04.07.1977.இல் முதல்வராக பொறுப்பு ஏற்கவேண்டும் எம்ஜியார்... அதற்கு முதல் நாள் இரவு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இறுதி கட்ட காட்சிகள் எடுக்க பட்டன...அனைவருக்கும் சிறப்பான விருந்து வாத்தியார் செலவில்... 

அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்பு முடிகிறது....அனைவரையும் அழைத்த பொன்மனம். இதுவரை நடிகனாக உங்களோடு பயணித்த நான் நாளை முதல் இந்த நாட்டின் முதல்வர்....உங்களை எல்லாம் தொழில் ரீதியாக பிரிய வேண்டிய நேரம் இது என்று கண்ணீர் மல்க செட்டில் இருந்த அனைவருக்கும் கண்ணீர் முட்டுகிறது. யாருக்கு என்ன உதவி வேண்டுமோ கேளுங்கள் புகழ் பணம் சம்பாதித்து விட்டேன் இனி இந்த நாட்டு மக்களுக்கு உண்மையாக இருப்பேன் என்கிறார்.

யாரும் எந்த உதவியும் கேட்கவில்லை..அனைவர் முகத்திலும் ஒரு தாங்க முடியாத சோகம்.. கோபால் மட்டும் அண்ணே உங்களை நெருங்கி இருந்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் அதுவே ஆசை என்று சொல்ல அவரின் அந்த ஆசையையும் நிறைவேற்றி..கூட இருந்த மற்றவர்களுடன் குழு புகை படம் எடுத்து கொண்ட பின் நடிகராக இருந்த நம் மன்னன் நாடாள அதிகாலை புறப்படுகிறார் 

நாடாள சென்ற மன்னன் மன்னனாகவே நம்மை விட்டு மறைந்தார் மக்கள் திலகம் 

Sampatth Kumar


 

Leave a Reply