• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் மல்மூரில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பரிதாப மரணம் 

கனடா

மல்மூர் நகரில்  மோட்டார் சைக்கிள் மற்றும் பயணிகள் கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஹாமில்டனைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மான்ஸ்பீல்ட் பகுதிக்கு சற்று வடக்கே அமைந்துள்ள ஏர்போர்ட் சாலையில் இரவு 8:45 மணியளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முதியவர் விபத்தின் தீவிரத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக ஏதேனும் விபரங்கள் தெரிந்தவர்களோ அல்லது அந்த வழியே சென்ற வாகனங்களின் டேஷ் கேமரா காட்சிகளை வைத்திருப்பவர்களோ உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்த தீவிர விசாரணையை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 
 

Leave a Reply