ரஜினியின் 173வது படத்தில் இணைய இருக்கும் பிரபல இளம் நடிகை...
சினிமா
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் பெயர் சமீபத்தில் வெளியானது.
தர்மன் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஆக்ஷன் கலந்த கதையாக உருவாக படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இந்த படம் ரஜினியின் படையப்பா மற்றும் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படங்களின் கலவையாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இப்பட பெயர் சமீபத்தில் ஒரு சூப்பரான நிகழ்ச்சியுடன் அறிவிக்கப்பட்டது, இதில் முக்கிய நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தர்மன் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் பிரபலம் குறித்து தகவல் வந்துள்ளது.
ஏற்கெனவே இரண்டு நாயகிகள் படத்தில் உள்ள நிலையில் தற்போது பிரபல நடிகை ருக்மணி வசந்த் இணையவுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.






















