• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செம்மணி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

இலங்கை

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்றைய தினம் காலை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் மொத்தம் 56 நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ள இந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில், இதுவரை 32 நாட்கள் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இடையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள், மீண்டும் இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான இந்த அகழ்வுப் பணிகளின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களிலும், மூன்றாம் கட்டத்தின் இதுவரையான பணிகளிலும் இதுவரை 412 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் 409 என்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பணிகளைத் தொடர்வதற்காக நீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்திற்கு அமைய, அகழ்வுப் பணிகள் தற்போது  நடைபெற்று வருகின்றன.

Leave a Reply