பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்..
சினிமா
தென்னிந்திய சினிமாவில் திருமண வயது வந்தும் சிங்கிளாகவே இருக்கும் நடிகர் என்றால் அது பிரபாஸ் தான்.
பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக கலக்கிவரும் பிரபாஸ் முழு கவனத்தையும் சினிமாவில் தான் செலுத்தியுள்ளார். சலார் 2, கல்கி 2, ஸ்பிரிட் என அடுத்தடுத்து 3 முதல் 4 ஆண்டுகளுக்கு அவரது கால்ஷீட் புல்லாக உள்ளது.
வருடா வருடம் இவரது படங்கள் குறித்த செய்தி வைரலாகிறதோ இல்லையோ திருமணம் பற்றி நிறைய செய்திகள் சமூக வலைதளங்களில் வலம் வரும்.
பான் இந்தியா நடிகராக வலம் வரும் பிரபாஸ், ஹைதராபாத்தில் சுமார் ரூ. 200 கோடி செலவில் ஒரு பிரம்மாண்ட அரண்மனை போன்ற வீட்டைக் கட்டி வருகிறாராம்.
இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் வீடு தயாராகி வருகிறதாம். இந்த பிரம்மாண்ட வீடு நடிகர் பிரபாஸ் தனது வருங்கால மனைவிக்காக கட்டுவதாகவும், அடுத்த வருடம் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு வருடமும் பிரபாஸ் திருமண செய்தி வருவதும், பிறகு பொய்யாவது வழக்கமாக நடக்கிறது. இந்த முறையாவது வரும் திருமண செய்தி உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்து காண்போம்.






















