• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜேர்மனியில் கொழுத்தும் வெய்யிலில் தவித்த மக்களை குளிர்வித்த பொலிஸார்

இலங்கை

ஜேர்மன் Berlin நகரில் கொழுத்தும் வெய்யிலில் தவித்த மக்களை தண்ணீர் பீச்சியடித்து பொலிஸார் குளிர்வித்த காணொளி வைரலாகி வருகின்றது.

ஐரோப்பிய நாடுகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான கடும் வெப்ப அலையைச் சந்தித்து வரும் நிலையில் ஜேர்மனியும் கடும் வெப்பத்தை சந்தித்துள்ளதுடன் வீதிகாளில் சமிக்ஞை விளக்குகள் வெப்பதால் உருகும் காணொளிகளும் வெளியா இருந்தது .

இதன் ஒரு பகுதியாக, ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாக்சோனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் மோக்கர்ன்-ட்ரூவிட்ஸ் (Möckern-Drewitz) பகுதியில் வெப்பநிலை 41.5 டிகிரி செல்ஸியஸை எட்டிப் பதிவாகியுள்ளது.

இன் நிலையில் சுட்டெரிக்கும் இந்த வெப்பத்தைத் தணிக்கவும், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் காவல்துறை நவீன நீர்த் தாரைகளைப் பயன்படுத்தி (Water cannons) வெப்பத்தைக் குறைக்க முயற்சித்தது.

இந்த அசாதாரண சூழலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தக் கடும் வெப்ப அலை, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழல் சமநிலைக்கும் ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் போதிய நீர் அருந்துமாறும், பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
 

Leave a Reply