• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பராசக்தி படத்தின் சம்பள பாக்கி ரூ.8.39 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு

சினிமா

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் பராசக்தி. இந்நிலையில் "பராசக்தி" படத்திற்காக ரூ.8.39 கோடி ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பராசக்தி படத்தின் OTT மற்றும் தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 10-ஆம் தேதி வெளியாகவுள்ள "இதயம் முரளி" திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூலை 8-ஆம் தேதி வரை இப்படத்தின் செயற்கைக்கோள் வழி வெளியீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிரான சுதா கொங்கராவின் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


 

Leave a Reply