• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் புதிய தலைவராக திரு. கிருஷ்ணகோபால் அவர்கள் தெரிவு!

கனடா

கிருஷ்ணகோபால் பெயரே மனிதநேயத் தின் நிழற்குடை!

வர்த்தக வெற்றியின் உச்சியில் நிற்கின்ற போதிலும் மனதில் மனிதாபிமானத்தின் ஒளியை அணைய விடாத அரிய மனிதர்! கனடாவின் வர்த்தக உலகில் தனித்துவம் பெற்று விளங்கும் திரு கிருஷ்ணகோபால் அவர்கள் வெறும் வணிக முன்னேற்றத்திற்காக மட்டும் அல்லாது சமூகப் பொறுப்புணர்வின் சின்னமாகவும் திகழ்ந்து வருகிறார். 

அம்மா நகை அடைவுமாடம் என்ற வணிக நிறுவனத்தின் மூலம் பொருளாதார வளத்தை உருவாக்கிய அவர் அதையே சமூக நலப் பணிகளின் வழியே மக்களிடம் மீண்டும் செலுத்தும் உயர்ந்த பண்பினை கொண்டவர்.

இன்று கனடா இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருப்பது அவரின் நேர்மையும், நம்பிக்கையும், சேவையும் பெற்ற மரியாதையின் முத்திரையாகும். இது ஒரு பதவி உயர்வு அல்ல. இது வர்த்தக சமூகத்தின் நன்றியின் வெளிப்பாடு!

கடந்த காலங்களில், குறிப்பாக அவர் தலைவராகவும் திரு கேதா நடராஜா அவர்கள் செயலாளராகவும் இருந்த காலகட்டத்தில் அந்தச் சங்கம் தாயகத்தில் செய்த மனிதாபிமானப் பணிகள் மறக்க முடியாதவை. கிளிநொச்சியில் இயங்கும் செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்காக சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் செஞ்சோலைக் கலையரங்கம் என்ற பிரமாண்டமான அரங்கத்தை நிர்மாணித்து வழங்கிய செயல் வெறும் கட்டிடமல்ல  அது அன்பின் ஆலயம்! அந்த  சிறுவர்களின் கனவுகளுக்கு ஒரு மேடை அமைத்த மனிதநேயத்தின் சின்னம்!

அவரது செயல்கள் சொல்லாமல் சொல்லும் செய்தி ஒன்று உண்டு: செல்வம் சேர்ப்பது சாதாரணம்; அதை மனிதநேயத்திற்கு செலவிடுவது தான் உயர்ந்த சாதனை! தேசப்பற்று அவரது நரம்புகளில் ஓடும் குருதி போல்! மனிதாபிமானம் அவரது இதயத் துடிப்பாக! எங்கு துன்பம் இருக்கிறதோ அங்கே அவரின் உதவி கை கொடுக்கிறது. எங்கு தேவையோ அங்கே அவர் அமைதியாகச் செயல் படுகிறார்.

இவ்வளவு சிறப்புகளுடன் மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் திரு கிருஷ்ணகோபால் அவர்கள் இனியும் சங்கத்தின் வழியாக பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து தாயக மக்களின் வாழ்வில் ஒளி பாய்ச்சுவார் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

ஈழநாடு பத்திரிகை இம் மகத்தான மனிதரை புகழின் உச்சியில் நிறுத்தி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. அவரது சேவைப் பாதை மேலும் விரிவடையட்டும்! சங்கத்தின் மனிதநேய ஒளி இன்னும் பல உயிர்களைத் தொட்டெழுப்பட்டும்! வாழ்த்துக்கள்!

T.K.. பரமேஸ்வரன் - ஈழநாடு

Leave a Reply