• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மம்மூட்டி - மோகன்லால் இணைந்து நடித்த பேட்ரியாட் - 2 நாட்களில் ரூ.50 கோடி வசூல்

சினிமா

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடத்த படம் பேட்ரியாட்.

பகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ராஜீவ் மேனன் என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது.

சைபர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் கடந்த மே 1 அன்று வெளியானது. வெளியான இரண்டு நாட்களிலேயே உலக அளவில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் முதல் நாளில் ரூ. 9.8 கோடியும் இரண்டாம் நாளில் ரூ. 6.15 கோடியும் வசூலித்தது. இரண்டு நாட்களில் இந்தியாவில் இப்படம் ரூ. 16.15 கோடி வசூலித்தது.

இரண்டாம் நாள் முடிவில் வெளிநாட்டு வசூல் ரூ. 31.50 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்திய மற்றும் வெளிநாட்டு வசூல் சேர்த்து, இரண்டு நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ. 50.23 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
 

Leave a Reply