வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்
இலங்கை
வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள புகைப்பட நிலையமொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்து காரணமாக நிலையத்தில் உள்ள பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் பொதுமக்கள் மற்றும் மாநகரசபையின் தீயணைப்பினரும் இணைந்து செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில், மின்சார ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.























