கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்
இலங்கை
கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் நேற்று பகல் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கான புத்தாண்டு முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட சேவையில் ஈடுபட்ட புகையிரதம் அக்கராயன் பகுதியில் இருந்து A9 பிரதான வீதியை நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் வாகனம் கடமையை கடக்க முற்பட்ட போது விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் அக்கராயன் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணுருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





















