• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க இராணுவ காட்டிய அதிரடி - பறிபோன உயிர்கள் 

கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 3 போ் கொல்லப்பட்டனா்.

சா்வதேச கடல் எல்லைப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான வழித்தடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற படகைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக சா்வதேச கடற்பகுதிகளில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக டிரம்ப் நிா்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் சுமாா் 178 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

கடந்த ஜனவரியில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ பிடிபட்டதைத் தொடா்ந்து, இத்தாக்குதல்கள் வேகம் எடுத்துள்ளன.
 

Leave a Reply