கனடாவில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
கனடா
கனடா முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் விலை கூடிய கோடைகால எரிபொருள் கலவை (summer fuel blend) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது சாதாரண பெட்ரோல் விலையை லீட்டருக்கு சுமார் 10 காசுகள் வரை உயர்த்தியுள்ளது.
மத்திய அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட எரிபொருள் கலால் வரி (federal fuel excise tax) நீக்கத்தின் மூலம் கிடைக்கக்கூடிய சேமிப்பை, இந்த விலை உயர்வு பெருமளவில் இல்லாது செய்துவிடும் என அஞ்சப்படுகிறது.
தற்போதைய நிலையில், நாம் மிகவும் விலை உயர்ந்த கோடைகாலத்தை எதிர்கொள்ளப் போகிறோம் போல் தெரிகிறது" என மலிவு விலை எரிசக்திக்கான கனடியர்கள் அமைப்பின் தலைவர் டான் மெக்டீக் தெரிவித்துள்ளார்.
மெக்டீக், எரிசக்திச் செலவுகளைக் குறைக்கக் கோரும் முன்னாள் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் கனடா முழுவதும் கோடைகால எரிபொருள் கலவைகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மத்திய அரசாங்கம் மேலதிக மலிவு விலை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மெக்டீக் வலியுறுத்தினார்.
தற்காலிகமாக நீக்கப்பட்ட கூட்டாட்சி எரிபொருள் கலால் வரிக்கு மேலதிகமாக, பெட்ரோல் மற்றும் டீசல் கொள்வனவுகள் மீதான பெறுமதி சேர் வரியையும் நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






















