• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மத்திய கிழக்கு போர் - ஆசிய நாடுகளுக்கு நிவாரணம் வழங்கிய ஜப்பான்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 10 பில்லியன் டொலர் பெறுமதியான நிதிக் கட்டமைப்பை உருவாக்குவதாக ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சி அறிவித்துள்ளார்.

ஈரான் மீதான போர் மேலும் தீவிரமடைந்தால் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி இலக்குகள் குறித்த அறிக்கையை வெளியிடும் போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.3 சதவீதம் வரை குறையக்கூடும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போரை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த சில நாட்களாக 100 டொலரைத் தாண்டியிருந்த உலக மசகு எண்ணெய் விலை தற்போது 90 டொலர் நிலைக்குச் சரிந்துள்ளது.

இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக, வரும் வாரங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்வாகவே இருக்கக்கூடும் என அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

Leave a Reply