• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அட்லீ இயக்கத்தில் மீண்டும் ஷாருக்கான் 

சினிமா

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் படம் ‘ராக்கா’. படத்தில் தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட் தரத்தில் பிரமாண்ட பொருட் செலவில் தயாராகி வரும் இந்த படத்தின் அப்டேட் குறித்து ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஏற்கனவே ஜவான் படத்தில் நடித்திருந்தார். படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. ‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜூனின் தோற்றம் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. அல்லு அர்ஜூனுக்கு இந்த தோற்றத்தை கொண்டு வர தினமும் 3 மணி முதல் 4 மணி நேரம் வரை ஆனது.
 

Leave a Reply