• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

இலங்கை

இலங்கையின் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலித்தமைக்காகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்குப் பாகிஸ்தான் அணி தீர்மானித்தமை குறித்து, தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானமானது விளையாட்டுத்திறன், நட்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளின் வலிமையை பிரதிபலிக்கிறது என்றும் அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply