• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகளுக்கு தடை

இலங்கை

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகத் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும். பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் அனைத்து விதமான விளம்பர நடவடிக்கைகளுக்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாகவோ வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்வு ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இம்முறை 382,249 பாடசாலை பரீட்சாத்திகளும் 69,214 தனியார் பரீட்சாத்திகளும் என மொத்தம் 451,463 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது நாடு முழுவதும் உள்ள 3,545 நிலையங்களில் பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply