மக்கள் திலகத்தின் அடிமைப் பெண் ஒரு கண்ணோட்டம் .
1. மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் -1958 பிறகு வந்த இரண்டாவது சொந்த படம் .
2. ஏராளமான பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம் .
3. ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட படம் .
4. தமிழ் பட வரலாற்றில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் பிரமாதமாக படமாக்கப்பட்ட படம் .
5. ஆரம்ப காட்சியில் வலையில் மக்கள் திலகம் - அசோகன் மோதும் சண்டைக்காட்சி [ஒற்றைக்காலில் ] புதுமையானது .
6. மக்கள் திலகம் கூனனாக அறிமுக காட்சி முதல் சிறையிலிருந்து தப்பிக்கும் வரை பரபரப்பு காட்சிகள் விறு விறுப்பானவை .மக்கள் திலகத்தின் கூன் வேடம் அருமை . குனிந்து நடந்து வரும் காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும் .
7. முதன் முதலில் மக்கள் திலகம் குனிந்து நடந்து வரும் போது அவருடைய நிழலுக்கு கூட கைத் தட்டல் கிடைத்த படம் .
8. நீர்வீழ்ச்சியில் சண்டை கற்று கொள்ளும் காட்சிகள் பின்னர் தனது தாயாரை சந்திக்கும் காட்சி - உருக்கமாக பேசிய காட்சி - தாயில்லாமல் நானில்லை பாடல் காட்சிகளில் மக்கள் திலகம் எம்ஜிஆரின் நடிப்பு அருமை
9. காலத்தை வென்றவன் ...நீ பாடலில் ஒரு வெற்றி வீரராக காட்சி முழுவதும் நிமிர்ந்த
நடையோடு புன்னகையோடு பிரமாதமாக நடித்திருப்பார் .
10.ஊட்டி பகுதிகளில் வேங்கயன் - ஜீவாவும் பிரியும் இடம்- பாலைவனத்தில் மாறு வேடத்தில் பாடும் ஏமாற்றாதே .....பாடல் மக்கள் திலகத்தின் நடிப்பு -ஜெயாவின் நடனமும் சூப்பர்.
11.பவள நாட்டில் ராணி முன் மக்கள் திலகம் தனது பலத்தை நிருபிக்கும் அட்டகாசமான
காட்சியில் மக்கள் திலகத்தின் உடற்கட்டும் - அழகிய தோற்றமும் ...கண்ணுக்கு விருந்து
12. ஆயிரம் நிலவே வா ... பாடல் கேட்கவே வேண்டாம் . பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் மன்மதனின் பாடல் .
13.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ..... இந்த பாடல் படமாகப்பட் டவிதமும் காட்சிகளும் அருமை .
14. சிங்கத்துடன் மக்கள் திலகம் மோதும் காட்சி - துணிச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு .
15. ஆங்கில படத்துக்கு இணையாக வந்த மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படம்.
- பிரசாந்த்!






















