ட்ரம்பின் புதிய அவதாரம் - கடுமையான கட்டுப்பாடுகளுடன் உருவாகும் சீர்திருத்தங்கள்
இலங்கை
அமெரிக்காவின் ஜனாபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டினார்.
தற்போது அவரது கவனம் தேர்தல் மீது சென்றுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாபதியாக ட்ரம்ப் கூறிருப்பதாவது:- அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது மோசடி செய்யப்பட்டன, திருடப்பட்டன. நாம் அவற்றை சரி செய்ய போகிறோம். தேர்தல் சீர்திருத்தங்கள், கடுமையான கட்டுப்பாடுகள் தேவை.
சில சந்தர்ப்பங்களைத் தவிர வாக்காளர்கள் வாக்களிக்க அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
மெயிலில் இனி வாக்கு சீட்டுகள் இல்லை. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாரும் வாக்கு சீட்டு முறையில் வாக்களிக்க கூடாது.
இந்த நடைமுறைகளை அனைத்து குடியரசு கட்சியினரும், பின்பற்றுவதற்காக போராடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.























