பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடையதாக கூறப்படும் உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்காரர்களின் விபரங்கள்
நிதியாளரான ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்த விசாரணையிலிருந்து, அமெரிக்க அரசாங்கம் மில்லியன் கணக்கான புதிய கோப்புகளை வெளியிட்டதைத் தொடர்ந்து விபரங்கள் தெரியவந்துள்ளன.
ஈலோன் மஸ்க்,பில் கேட்ஸ்,டொனால்ட் டிரம்ப்,ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-,ரிச்சர்ட் பிரான்சன்,சாரா பெர்குசன்,லார்ட் மண்டேல்சன்,ஸ்டீவ் பானன்,மிரோஸ்லாவ் லாஜ்சாக்,ஹோவர்ட் லட்னிக்,லாரி சம்மர்ஸ்,,,,ஸ்டீவ் டிஷ்,பிரட் ராட்னர்,பீட்டர் அட்டியா,கேசி வாசர்மேன்,செர்ஜி பிரின்,எஹுத் பராக்,,நோம் சாம்ஸ்கி,பிராட் கார்ப்,பில் கிளிண்டன்,தீபக் சோப்ரா,என்று பட்டியல் நீள்கிறது .
35 லட்சம் பக்கங்கள், 1.80 லட்சம் புகைப்படங்கள், 2,000 வீடியோக்கள் என ஆதாரங்கள் இருக்கின்றன .
ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் ஒரு பாலியல் குற்றவாளி .
1953-ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த எப்ஸ்டீன், அங்கேயே ஒரு பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் பயின்றார். இருப்பினும், இவர் பட்டப் படிப்பு எதனையும் முடிக்கவில்லை. ஒரு காலத்தில் கணித ஆசிரியராகப் பணியாற்றியவ ர்.
அப்போது இவரிடம் பயின்ற ஒரு மாணவனின் தந்தை, இவருடைய திறமையைக் கண்டு 'பியர் ஸ்டெர்ன்ஸ்' (Bear Stearns) என்ற வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியில் இவரை ஒரு மூத்த பங்குதாரராக ஆக்குகிறார்.
1982-இல், 'ஜே எப்ஸ்டீன் அண்ட் கோ' என்ற பெயரில் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்குகிறார் எப்ஸ்டீன். இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே வெற்றியைக் கண்டது. இதனால், இவருடைய சாதாரண வாழ்க்கை ஆடம்பர வாழ்க்கையாக மாறியது.
புளோரிடாவில் ஒரு மாளிகை, நியூ மெக்சிகோவில் ஒரு பண்ணை வீடு எனப் பல சொத்துகளைக் குவித்தார். அதே நேரத்தில் பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.
அந்த விபரங்கள் நான் மேலே குறிப்பிட்ட பிரபலங்களும் அடங்கும் .
ஜெஃப்ரி எப்ஸ்டீன் திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆனால் கிஸ்லேன் மேக்ஸ்வெல் உட்பட பல பெண்களை 'டேட்' செய்துள்ளார்.
2005-இல் புளோரிடாவில் 14 வயதுச் சிறுமியிடம் எப்ஸ்டீன் தவறாக நடந்துகொண்டதாக அந்தச் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதற்குப் பிறகு காவல்துறை அவருடைய வீட்டைச் சோதனை செய்தபோது, வீடு முழுவதும் சிறுமிகளின் புகைப்படங்கள் கிடைத்தன. ஆனால் அப்போது ஃபெடரல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துவிட்டார். பின்னர் 2008-இல், இவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது கூட, ஒரு நாளைக்கு 12 மணி நேரம், வாரத்தில் 6 நாட்கள் அவர் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யும் வகையில் வொர்க் ரிலீஸ் (Work Release) என்ற சலுகை வழங்கப்பட்டது. பின்னர் 13 மாதங்களில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையானார்.
எப்ஸ்டீனின் மேன்ஹாட்டன் மாளிகையில் எஃப்பிஐ (FBI) சோதனை நடத்தியது. அதன்பிறகு அவருடைய முன்னாள் மேலாளர் ஜுவான் அலெசியிடம் விசாரித்தபோது, அவர் பல அதிர்ச்சியூட்டும் விஷயங்களை வெளிப்படுத்தினார். 'மசாஜ்' செய்வதற்காகச் சிறுமிகளை அழைத்து வருமாறு எப்ஸ்டீனும், கிஸ்லேன் மேக்ஸ்வெல்லும் தன்னிடம் கேட்டதாக அலெசி வாக்குமூலம் அளித்துள்ளார்.
எப்ஸ்டீன் வீட்டில் வேலை செய்பவர்களுக்காகவே 69 பக்க கையேடு ஒன்று இருந்துள்ளது. அதில், "யாரும் எப்ஸ்டீனின் கண்களைப் பார்த்துப் பேசக்கூடாது; எதைப் பார்த்தாலும் காது கேட்காதது போலவும், வாய் பேசாதது போலவும் இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2008-இல் நியூயார்க் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் எப்ஸ்டீனின் பெயர் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில், பல பெண்கள் முன்வந்து, தாங்கள் சிறுமிகளாக இருந்தபோது எப்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகப் புகார் அளித்தனர்.
2019 ஜூலையில் பாலியல் கடத்தல் வழக்கில் மீண்டும் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். சிறுமிகளை வைத்து ஒரு பெரிய வலைப்பின்னலையே நடத்தி, அவர்களைச் சுரண்டி வந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எப்ஸ்டீன் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வந்தார். நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, நியூயார்க் சிறையில் அடைத்தது.
சிறையில் இருந்தபோது கழுத்தில் காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தக் காயங்கள் குறித்து சிறை நிர்வாகமோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ அதிகாரப்பூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.
2019 ஆகஸ்ட் மாதத்தில் அவர் சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது.
எப்ஸ்டீன் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பலரும் சந்தேகங்களை எழுப்பினர். பல அரசியல் கட்சிகள் இந்த ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைச் சட்டம்' நிறைவேற்றப்பட்டது.
டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் அனைத்து ஆவணங்களும் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் காரணமாக
2௦25ஆண்டின் இறுதியிலேயே முதற்கட்டமாக ஜனநாயகக் கட்சியின் 'மன்ற மேற்பார்வைக் குழு' (House Oversight Committee) சுமார் 70 புகைப்படங்களை வெளியிட்டது. பிறகு மின்னஞ்சல்கள், வீடியோக்கள், ஆவணங்கள் எனப் பல ஆதாரங்கள் சிறுகச் சிறுக வெளியாகின.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், ஸ்டீவ் டிச், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மைக்கேல் ஜாக்சன் ஆகிய பெயர்களும் அடங்கும். பில் கிளிண்டன் நிர்வாகத்தில் கருவூலச் செயலாளராக இருந்த லாரி சம்மர்ஸ், டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பேன்னன் போன்ற பல பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் சில முக்கியபுல்லிகளும் இதில் அடங்கும் ..
எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயரோ அல்லது புகைப்படமோ இடம்பெற்றிருப்பதாலேயே சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
பில் கிளிண்டன் நீச்சல் குளம் மற்றும் குளியலறை தொட்டியில் இருப்பது போன்ற புகைப்படங்கள், இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் முகம் மறைக்கப்பட்ட ஐந்து பேரின் மீது படுத்திருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் பல மின்னஞ்சல் உரையாடல்கள் வெளியாகின.
'நான் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் நபர் அல்ல.. குற்றம் செய்த நபர் மட்டுமே. ஒரு கொலைகாரனுக்கும், ஒர் உணவுப்பொருளை திருடுபவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது" என்று 2011-ல் நியூயார்க் போஸ்ட் இதழிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூறியதை நினைவில் கொண்டே கட்டுரைகள் எழுதப்படல்வேண்டும் .இறந்தவனின் மேல் பழியை போடுவது எளிது .உண்மைத்தன்மையை அறியாது பல யு டுபேர்ஸ் கற்பனைகளை அடுக்குவது அபண்டகரமானது .அமெரிக்க அதிபரின் பிரச்சாரமாகக் கூட இது இருக்கலாம்
பாரிஸிலிருந்து தனது தனி விமானத்தில் திரும்பி வந்தபோது, 6 ஜூலை 2019 அன்று நியூயார்க்கில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தேவைகளுக்காக ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர் இழந்தார்.
சிறுமிகளை பாலியல் உறவுக்காக பயன்படுத்தும் "பெரிய வலையமைப்பு" ஒன்றை நடத்தினார் என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
டிரம்பைத் தவிர, இன்னும் பல முக்கியப் பிரமுகர்களுடன் எப்ஸ்டீன்நட்பாக இருந்த காரணத்தினாலேயே அவர்கள் அனைவரும் தவறு செய்தவர்கள் என்று அர்த்தமல்ல..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 25 ஆண்டுகளுக்கு முன்பு, நியூ ஜெர்சியில் 13 - 14 வயதுடைய சிறுமியிடம் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக எப்ஸ்டீன் கோப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
”குழந்தைகளை விற்பனை செய்வதற்காக நடத்தப்பட்ட ஒரு விருந்துக்கு எப்ஸ்டீன் அழைத்து வந்தார். அந்த விருந்தில் பெண் குழந்தைகளை 'முற்றிலும் தகாத அருவருப்பான முறையில்' டிரம்பே மதிப்பிட்டார்.
இந்த விருந்தில் எலான் மஸ்க் மற்றும் வயதான பலர் கலந்துகொண்டனர். ஜூனியர் டிரம்ப், இவான்கா டிரம்ப், எரிக் டிரம்ப் உள்ளிட்டோரும் இருந்தனர். பின்னர், எங்களை அறைக்கு அழைத்துச் சென்று தகாத பாலியல் உறவுக்கு ஒத்துழைக்க கட்டாயப்படுத்தப்பட்டோம். பின்னர், டிரம்ப் என்னுடன் வல்லுறவு கொண்டார். அப்போது எனக்கு வயது 13. எப்ஸ்டீனின் நண்பர் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லும் உடனிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ இது திட்டமிட்ட சதி என்றே எண்ணத் தோன்றுகிறது .மற்றவர்களின் தூண்டுதலால் ஜெஃப்ரி எப்ஸ்டீன் செய்தது உண்மை .
பிரச்சனை என்று வரும்பொழுது இவரை மாட்டிவிட்டு தாங்கள் தாங்கள் தப்பிப்பதற்காக மாட்டி விட்டிருக்கிறார்கள் என்பதே எனது அபிப்ராயம்
Manikkavasagar Vaitialingam






















