• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் உருவாகியுள்ள கவலை

கனடா

கனடாவில், பொது நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், வைரஸ் தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்டவர்களும் அங்கிருந்தது தெரியவந்துள்ளதால் கவலை உருவாகியுள்ளது.

ஜனவரி மாதம் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை, கனடாவின் மனித்தோபா மாகாணத்திலுள்ள பிராண்டன் நகரில் விவசாயம் தொடர்பிலான கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். 

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், இந்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 13ஆம் திகதிவரை, தங்களுக்கு மண்ணன் அல்லது மணல்வாரி அல்லது தட்டம்மை என்னும் measles என்னும் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்பதை கவனித்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

மனித்தோபா மாகாணத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 74 பேருக்கு தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிலர் தங்களுக்கு பாதிப்பு இருப்பது தெரியாமலே பிராண்டன் நகரில் நடைபெற்ற அந்த விவசாய கண்காட்சியில் கல்ந்துகொண்டிருக்கலாம் என கருதப்படுவதாலேயே சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply