தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்
இலங்கை
ஹொரணை – கொழும்பு (120) வழித்தடத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று (02) தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (03) தொடர்ந்து இரண்டாவது நாளாக தொடர்கிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 120 ஆவது பேருந்து பாதையில், ஹொரணையில் இருந்து புறக்கோட்டைக்கு இயக்கப்படும் பேருந்திற்கு புதிய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.






















