• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புர‌ட்சித்த‌லைவ‌ர் அர‌சிய‌ல் பொதுவாழ்வு திரையுல‌க‌ வாழ்வை விட‌ நீள‌மான‌து..

சினிமா

புர‌ட்சித்த‌லைவ‌ர் ஒன்றும் அரசியலுக்கு புதியவர் இல்லை முத‌ல்வ‌ராக‌ வர வேண்டும் என்று நினைத்து பார்த்தது இல்லை. அவ‌ர‌து அர‌சிய‌ல் பொதுவாழ்வு திரையுல‌க‌ வாழ்வை விட‌ நீள‌மான‌து..
1930 முத‌ல் 1950 வ‌ரை காங்கிர‌ஸ் க‌ட்சி உறுப்பின‌ராக‌ இருந்தார்..க‌த‌ர் ஆடையே உடுத்தி வ‌ந்தார். பின்ன‌ர் காங்கிர‌ஸில் உள்ள ஏற்ற‌ தாழ்வுக‌ள், ஜாதி பாகுபாடுக‌ள் ஆகிய‌வ‌ற்றால் வெறுத்து விலகி எந்த‌ அர‌சிய‌லிலும் இல்லாம‌ல் சில கால‌ம் இருந்தார். .பின் அண்ணாவின் உரைக‌ளாலும், சிந்த‌னைக‌ளாலும் க‌வ‌ர‌ப்ப‌ட்டு திமுக‌வில் தானாக‌வே இணைந்தார். திமுக‌ த‌மிழ‌க‌த்தின் சின்ன‌மான உத‌ய‌சூரிய‌னையும்,
அறிஞ‌ர் அண்ணாவின் கொள்கைக‌ளையும் ப‌ட்டி தொட்டியெங்கும் பிர‌ப‌ல‌ப்ப‌டுத்தினார். 1967 ல் திமுக‌வை ஆட்சிக்க‌ட்டிலில் அம‌ர்த்த‌ முழுமுத‌ற்கார‌ண‌மே எம்.ஜி.ஆர்தான். அதை அண்ணாவே சொல்லி இருக்கிறார்.
பின்ன‌ர் 1969 ல் அண்ணாவின் திடீர் ம‌றைவிற்குப்பின் நிலைகுலைந்து போயிருந்த‌ திமுக‌வை தூக்கி நிறுத்தி த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ராக‌ க‌ருணாநிதியை நிய‌மிக்க‌ ஆத‌ர‌வு அளித்து அக்க‌ருத்தை பிற‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கும் எடுத்துச்சொல்லி நிறைவேற்றினார்.
1971 ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ந‌டைபெறும் போது காமராஜ‌ர்தான் வெல்வார் என்று ப‌த்திரிக்கைக‌ள் ப‌ல‌வும் எழுதின‌. திமுக‌வின் மீதும் சில அதிருப்திக‌ள் மக்களிட‌ம் இருந்த‌து..அப்போது எம்.ஜி.ஆர் த‌மிழ‌க‌மெங்கும் சூராவ‌ளி சுற்றுப்ப‌ய‌ண‌ம் செய்து 180 தொகுதிக‌ளில் பிர‌ம்மாண்ட‌ வெற்றியை பெற‌வைத்தார்.
1967ல் ப‌ர‌ங்கிம‌லையில் நின்ற‌போதும் துப்பாக்கி சூட்டினால் ஆஸ்ப‌த்திரியில் ப‌டுத்துக்கொண்டே ஜெயித்தார். ஆனால், 1971ல் மீண்டும் ப‌ர‌ங்கிம‌லையில் நின்ற‌போதும் த‌ன‌து தொகுதி பிர‌ச்சார‌த்திற்காக‌ க‌டைசி நாளில் சில ம‌ணி நேர‌ம் ம‌ட்டும் ஒதுக்கி பிற‌நாட்க‌ள் முழுதும் ம‌ற்ற‌ வேட்பாள‌ர்க‌ளுக்காக பிர‌ச்சார‌ம் செய்த‌வ‌ர் எம்.ஜி.ஆர்..
அதும‌ட்டும‌ல்ல, பெரும்புய‌ல், வெள்ள‌ம், தீவிப‌த்து போன்ற‌ பேரிட‌ர் கால‌ங்க‌ளில் பொருளுத‌வி செய்வ‌து ம‌ட்டுமின்றி க‌ள‌த்திலே இற‌ங்கி துணைநின்ற‌வ‌ர்..அதே போல் இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய‌ அண்டைநாடுக‌ளுட‌ன் போர் ஏற்ப‌ட்ட‌ போதெல்லாம் யுத்த‌ நிதி வ‌ழ‌ங்கிய‌வ‌ர்.
த‌ன்னை 1971ல் மீண்டும் முத‌ல்வ‌ராக்கிய‌ எம்.ஜிஆரையே 1972 அக்டோப‌ரில் க‌ட்சியை விட்டு நீக்கினார் கலைஞர் க‌ருணாநிதி. அத‌ற்கு மிக‌ முக்கிய‌ கார‌ண‌ம் எம்.ஜி.ஆருக்கு ம‌க்க‌ளிட‌ம் ஏற்ப‌ட்டுவ‌ரும் அப‌ரித‌ செல்வாக்கு, 1976 மே வ‌ரை த‌ன்னை அசைக்க‌ முடியாது என்ற‌ த‌ப்புக்க‌ண‌க்கு, குடும்ப‌ அர‌சிய‌லுக்கு தொந்த‌ர‌வு வ‌ர‌க்கூடாது, எம்.ஜி.ஆரின் வ‌ய‌து அப்போது 55 (1972ல்) 1976 தேர்த‌லின்போது 60 வ‌ய‌து ஆகிவிடும்..திரையுல‌கிலிருந்தும் வில‌கிவிடுவார்..த‌ன்னை அடுத்த‌ தேர்த‌லிலும் அசைக்க‌ முடியாது என்ற‌ த‌வ‌றான‌ எண்ண‌மே இருந்தது
தான் சார்ந்திருந்த‌ க‌ட்சிக்கே ஓடி ஓடி உழைத்த‌ எம்.ஜி.ஆர் தான்
1972 ல் அக்டோப‌ரில் துவ‌க்கிய‌ அண்ணா திமுக‌விற்காக‌ போராடாம‌ல் இருப்பாரா? உண்மையிலேயே அவ‌ர் உயிருக்கு ஆப‌த்து ஏற்ப‌டுத்தும் சூழ்நிலைக‌ள் இருந்த‌போதும் த‌ன் வீட்டில் முட‌ங்கிக் கொள்ளவில்லை. ம‌க்க‌ள் வெள்ள‌த்தில் மித‌ந்து பிர‌ச்சார‌ம் செய்து த‌ன‌து புதிய‌ க‌ட்சியையும்,
இர‌ட்டை இலை சின்ன‌த்தையும் பிர‌ப‌ல‌ப்ப‌டுத்தினார்.
1972 ல் க‌ட்சி ஆர‌ம்பித்த‌போதும் 1977 மே மாத‌ம்தான் ஆட்சியை பிடித்தார்..ஏனெனில் அப்போது தான் பொதுத்தேர்த‌ல் வ‌ந்த‌து. அதேநேர‌ம் 1973 ல் ந‌ட‌ந்த‌ திண்டுக்க‌ல் பாராளும‌ன்ற‌ தேர்த‌ல், பின்ன‌ர் ந‌டைபெற்ற‌ கோவை பாராளுமன்ற‌ தொகுதி தேர்த‌ல், கோவை மேற்கு ச‌ட்ட‌ம‌ன்ற‌ இடைத்தேர்த‌ல், புதுச்சேரியில் ச‌ட்ட‌ம‌ன்ற‌ பொதுத்தேர்த‌லில் முத‌ன்முத‌லில் ஆட்சியை பிடித்த‌து, செய்யாறு இடைத்தேர்த‌ல் என‌ அனைத்திலும் வெற்றி..அப்போது க‌ருணாநிதி த‌விர‌ காமராஜ‌ர், இந்திராகாந்தி என்ற‌ பெரும் த‌லைவ‌ர்க‌ளின் க‌ட்சிக‌ளையும் 2வ‌து,
3வ‌து இட‌ங்க‌ளுக்கு த‌ள்ளினார்.
பின்ன‌ர் 1977 தேர்த‌லில் ஒரே நேர‌த்தில் த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தையும், புதுச்சேரியில் 2வ‌து முறையாக‌வும் ஆட்சியை பிடித்தார்.
அவ‌ர‌து ம‌க்க‌ள் ந‌லத்திட்ட‌ங்க‌ள், மனித‌நேய‌ம், க‌ருணையுள்ள‌ம் கார‌ண‌மாக‌ தொட‌ர்ந்து 1980, 1984 ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ளிலும் பெரிய வெற்றி பெற்றார். 1984ல் உட‌ல்ந‌லம் பாதித்து சில மாத‌ம் ம‌ட்டும் மக்களிட‌மிருந்து வில‌கி இருந்தாலும் 1985 பிப்ர‌வ‌ரி முத‌ல் தான் ம‌றைந்த‌ 1987 டிச‌.24வ‌ரை மக்களை ச‌ந்திப்ப‌திலும், பொது நிக‌ழ்ச்சிக‌ளிலும் த‌ன் உட‌ல்நிலை, நோய்த்தொற்று போன்ற‌ நொண்டிச்சாக்குக‌ளை கூறிக்கொண்டு முட‌ங்கியிருக்காம‌ல் பொதுவாழ்வில் த‌ன்னை ஈடுப‌டுத்திக் கொண்டார்..அவ‌ர் ம‌ட்டும் த‌ன் உட‌ல்ந‌ல பாதிப்பிற்குப்பின் பொதுவெளிக்கு வ‌ராம‌லும், உட‌ல் ந‌ல‌த்தில் ம‌ட்டும் க‌வ‌ன‌ம் செலுத்தியிருந்தால் மேலும் 15 ஆண்டுக‌ள் வ‌ரை வாழ்ந்திருப்பார்..
ம‌க்க‌ள் ந‌ல‌ம்..ம‌க்க‌ள் ந‌ல‌ம் என்று சொல்ப‌வ‌ர்க‌ள் த‌ம் ந‌லத்தையும், த‌ம் ம‌க்க‌ள் ந‌லத்தை ம‌ட்டும் பாராம‌ல் வெற்று அர‌சிய‌ல் அறிக்கை, பேட்டிக‌ள் விடாம‌ல் இற‌ங்கி க‌ளப்ப‌ணி ஆற்ற‌ வேண்டும்..சுயநலத்தால் ப‌த‌வியை அபகரித்து அர‌சிய‌ல் ப‌ணி செய்து எதிரிகளின் வெற்றிக்கு துணை செல்வது சம்பாதித்தை சொத்துகளை காப்பாற்றி கொண்டு இருப்ப‌வ‌ரெல்லாம் த‌லைவ‌ன‌ல்ல.. ஒரு கழகம் வெற்றிபெற ஒள்றுமை கூட்டுமுயற்சி மிகவும் அவசியம் இதை த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் விரைவில் சுயநலம் பைடைத்தவர்களுக்கு உண‌ர‌வைப்பார்க‌ள்..
கூரைக‌ளெல்லாம் கூடி வ‌ள‌ர்ந்தால் கோபுர‌ம் ஆவ‌தில்லை.
குருவிக‌ளெல்லாம் உய‌ர‌ப் ப‌ற‌ந்தால் ப‌ருந்துக‌ள் ஆவ‌தில்லை..
இருந்தாலும் மறைந்தாலும்
பெயர் சொல்லவேண்டும்
இவர்போல யாரென்று
ஊர் சொல்லவேண்டும்.

வாழ்க!பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.

Leave a Reply