• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் கிளப்பிய புதிய சர்ச்சை

கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களைக் காண்பித்து, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் துடியாய் துடித்து வருகிறார்.

இதற்கு பிற ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிரீன்லாந்தின் பாதுகாப்பிற்காக ராணுவத்தையும் அனுப்பி வைத்துள்ளன. இதனால், கடுப்பான ட்ரம்ப், 8 ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரியை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் அடிபணியாத நிலையில், கிரீன்லாந்தை வாங்குவது தொடர்பாக டென்மார்க்குடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டதாக அதிபர் டிரம்ப்பின் கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கிரீன்லாந்தை வாங்குவதற்கான பேச்சு நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; நாங்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டோம். கிட்டத்தட்ட ஒப்பந்தம் எட்டப்போவதாகவே நான் நினைக்கிறேன். இது அனைவருக்கும் சிறப்பான ஒப்பந்தமாக இருக்கும். குறிப்பாக தேசிய பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியமான ஒப்பந்தம், இவ்வாறு அவர் கூறினார். 
 

Leave a Reply