• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொராண்டோவில் போலி நாணயத்தாள் குறித்து வெளியான தகவல்

கனடா

கனடாவின் ஒன்டாரியோ மாநிலம் ஈஸ்ட் க்வில்லிம்பரி பகுதியில் உள்ள வணிக வளாகங்களில், போலி 100 டொலர் நோட்டுகளை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்ததாக டொராண்டோவைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாங் ஸ்ட்ரீட் மற்றும் கிரீன் லேன் சந்திக்கும் பகுதியில் இந்த மோசடி சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணையில், அந்த நபர் பல வணிக நிலையங்களுக்கு சென்று, போலி 100 டொலர் நோட்டுகளை வழங்கி பொருட்கள் வாங்கியதாக தெரிய வந்துள்ளது. சிறிது நேரத்திற்குள் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து, ஒரே தொடர் எண்ணை (Serial Number) கொண்ட ஏழு போலி 100 டொலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

அந்த நோட்டுகளின் தொடர் எண் GKV9181892 என அறிவிக்கப்பட்டுளள்ளது.. கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய டொமினிக் கோல்மேன் (Dominic Coleman) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.    

Leave a Reply