• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா குறித்த டிரம்பின் தீர்மானத்தை எதிர்க்கும் அமெரிக்கர்கள்

கனடா

கனடாவும் கிரீன்லாந்தும் சுயாதீனமாகவும் தன்னாட்சியுடனும் தொடர வேண்டும் என அமெரிக்கர்களின் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர் என புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

ஜனவரி 13 முதல் 15 வரை 1,002 அமெரிக்கப் பெருநிலப்பகுதி குடிமக்களிடம் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட இந்தக் கணிப்பில், 66 சதவீதமானவர்கள் கனடா ஒரு சுயாதீன நாடாகவே தொடர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அதேபோல், 56 சதவீதமானவர்கள் டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ள கிரீன்லாந்து தனது தற்போதைய நிலையைத் தொடர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

கனடாவை அமெரிக்காவின் ஒரு பிரதேசமாக அல்லது மாநிலமாக மாற்ற வேண்டும் என ஆதரித்தவர்கள் 17 சதவீதம் மட்டுமே எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிரீன்லாந்தை அமெரிக்க பிரதேசம் அல்லது மாநிலமாக மாற்ற வேண்டும் எனக் கூறியவர்கள் 23 சதவீதமாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் விரிவாக்க (expansionist) அரசியல் நோக்கத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக மாற்ற வேண்டும் என அவர் பலமுறை கூறியுள்ளதுடன், தேசிய பாதுகாப்பை காரணமாக காட்டி கிரீன்லாந்தையும் இணைத்துக் கொள்ளும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கனடா, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்றும் நேட்டோ (NATO) பாதுகாப்பு கூட்டணியின் நட்பு நாடுகளாக உள்ள நிலையில், கனடாவும் டென்மார்க்கும் ட்ரம்பின் இந்த விரிவாக்க முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 
 

Leave a Reply