வண்டலூர் உயிரியல் பூங்கா யானையை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்
சினிமா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார்.
6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‛பராசக்தி' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





















