ஈரான் அரசை பாராட்டிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
ஈரானில் 800க்கும் மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அரசை பாராட்டியுள்ளார்.
ஈரானில் பணவீக்கம் அதிகரித்ததன் எதிரொலியாக தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வரும் சூழலில், கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டு பொதுசொத்துகளை சேதப்படுத்தியவர்களுக்கு அந்நாட்டு சட்டத்தின்படி, தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.
இந்த சூழலில், அந்நாட்டு வெளியுறவுமைச்சர் அப்பாஸ் அராக்சி, போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் கூறியதாவது,
ஈரானில் 800 பேரை நேற்று (16) தூக்கில் போட திட்டமிடப்பட்டு இருந்தது. அதனை அவர்கள் இரத்துச் செய்துள்ளனர். இதனை நான் பெரிய அளவில் மதிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.























