• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு

இலங்கை

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

யாழ் இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டு பொங்கல் பானையை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply