• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனநாயகன் ப்ரீ புக்கிங் விவரம்.. இதுவரை எவ்வளவு வசூல்

சினிமா

தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் வெளிவருவதற்கு இன்னும் 5 நாட்கள் உள்ளன. இப்படத்தை திரையரங்கில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நேற்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஜனநாயகன் படத்தின் டிரைலர் வெளிவந்தது. எதிர்பார்த்தபடியே பகவந்த் கேசரி படத்தின் சாயல் இந்த டிரைலரில் தெரிந்தது.

அதையும் தாண்டி அரசியல், எந்திரங்கள் என பல விஷயங்களை இப்படத்தில் வைத்துள்ளார் இயக்குநர் ஹெச். வினோத். மேலும் இந்த டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Youtube-ல் மட்டுமே அனைத்து மொழிகளிலும் சேர்த்து, இதுவரை 42 மில்லியன் வியூஸ் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. இதுவரை நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் இப்படம் ரூ. 24.5 கோடி வசூல் செய்துள்ளது. 
 

Leave a Reply