சுவிட்சர்லாந்து தீ விபத்தில் அடையாளம் காணப்பட்ட நால்வரின் உடல்கள்
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் - மோண்டானா விடுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்த நிலையில் நால்வரின் உடல்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட இரு இளைஞர்கள் மற்றும் இரு பெண்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்த 119 பேரில் 113 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீதியானவர்களை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
























