ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம் அதிர்ச்சி தகவல்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் நடித்து அறிமுகமானவர் கம்ருதீன். இவர் பிக் பாஸ் 9ல் போட்டியாளராக களமிறங்கினார்.
85 நாட்களை கடந்து பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வந்த இவர் நேற்று ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். சாண்ட்ராவிடம் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் நடந்துகொண்ட விதத்தால், இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு ஷாக்கிங் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கம்ருதீன் இப்படி நடந்துகொண்டதால், மகாநதி சீரியலில் இருந்து அவரை நீக்கிவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






















