• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

சினிமா

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் இயக்குநர் இமயம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். முன்னணி நடிகர்கள், நடிகைகளை கொண்டு படத்தை இயக்கியதோடு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார்.

இதனிடையே, கடந்த ஆண்டு பாரதி ராஜாவின் ஒரே மகனும் நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா திடீரென காலமானார். தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில், மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து, பின்னர் சென்னை திரும்பினார். தற்போது 80 வயதை கடந்துள்ள பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில், பாரதிராஜாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply