• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவில் மணல் அகழ்வு குறித்து விசாரணைக்கு வலியுறுத்து

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் இவ்வாறு அகழப்படும் மணல்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு எந்தவகையிலும் பயன்படுத்தாமல் வெளிமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதுவரை பாவாடைக்கல்லாறு பகுதியில் இருந்து 500 டிப்பர் வரையான மணல்கள் ஏற்றப்பட்டுள்ளதுடன் 200 டிப்பர் மணல்கள் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிந்தது.

வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு கனியவளத்திணைக்களத்தினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மணல் அகழ்வு ஒப்பந்ததாரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கனியவளத்திணைக்களத்தின் இந்த செயற்பாடு தொடர்பாக அரசாங்கம் ஆய்வுக்குட்படுத்தி விசாரணை செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Reply