சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு 1 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவி
இலங்கை
டித்வா சூறாவளிக்குப் பின்னர் சீனாவின் ஆதரவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) சர்வதேசத் துறை இலங்கைக்கு 1 மில்லியன் சீன யுவான்களை ( சுமார் 44 மில்லியன் ரூபா) பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த தகவலை உறுதிபடுத்திய கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், இலங்கை மக்களுக்கான அன்பும் மற்றும் அக்கறையின் ஒரு பகுதியாக இந்த நன்கொடையை வழங்குவதாக அறிவித்துள்ளது.
சூறாவளியின் பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்” முயற்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்திய வாங் ஜுன்ஷெங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவின் இலங்கைக்கான அண்மைய உயர்மட்ட விஜயத்தைத் தொடர்ந்து இந்த உதவி வந்துள்ளது.






















