மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கை
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மானிப்பாயில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக விபத்துக்கு உள்ளானது.
இதில் முச்சக்கர வண்டியை செலுத்திய 55 வயதுடைய நபரும் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





















