• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை

இலங்கை

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலா ​​வெவ படுகையைச் சேர்ந்த கலா வெவ மற்றும் கண்டலம நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே நிரம்பி வழிவதால், போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகபட்ச அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதுரு ஓயா நீர்த்தேக்கம் அதன் அதிகபட்ச நீர் மட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்தில் அந்த நீர்த்தேக்கமும் நிரம்பி வழிய வாய்ப்புள்ளதாக மகாவலி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply