• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்

இலங்கை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்த ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, ​​வழக்கு தொடர்பான சில ஆவணங்களை சட்டமா  அதிபர் பிரதிவாதி சட்டத்தரணிகளிடம் வழங்கினார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதிபதி, வழக்கை பெப்ரவரி 16 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

நாமல் ராஜபக்ஷ இலங்கையில் ரக்பியை ஊக்குவிப்பதற்காக, இந்தியாவின்  ‘கிரிஷ்’ நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயினை பெற்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக சட்டமா அதிபர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
 

Leave a Reply