• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ட்ரம்பால் மெக்சிகோ பக்கம் திரும்பியுள்ள கனேடியர்கள்

கனடா

அமெரிக்க ஜனாதிபதியின் கெடுபிடிகளால் கனேடிய மக்கள் அமெரிக்க சுற்றுலாவைப் புறக்கணித்து வருவது தெரிந்த விடயம்தான்.

இந்நிலையில், அவர்கள் அமெரிக்காவுக்கு பதிலாக வேறொரு நாட்டுக்கு சுற்றுலா செல்லத் துவங்கியுள்ளார்கள். 

ஆம், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதிலிருந்தே, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பதாக மிரட்டியது மற்றும் கூடுதல் வரிகள் விதித்தது ஆகிய விடயங்கள் கனேடிய மக்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன.

ஆகவே, அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதை கனேடியர்கள் பலர் தவிர்த்துவருகின்றனர். இந்நிலையில், அவர்கள் கவனம் மெக்சிகோ பக்கம் திரும்பியுள்ளது. எப்படியும் பண்டிகைக் காலங்களில் சுற்றுலா செல்லும் வழக்கம் பல கனேடியர்களுக்கு உள்ளது. 

சரி, அமெரிக்காவுக்கு போகவில்லையென்றால் என்ன, வேறு எந்த நாட்டுக்காவது செல்லலாம் என திட்டமிட்ட மனித்தோபாவைச் சேர்ந்த சார்லஸ், மெரிலீ தம்பதியர் (Charles Birt and Merilee Mollard), தற்போது மெக்சிகோ செல்ல முடிவு செய்துள்ளனர்.

ஆனாலும், அவர்களால் அமெரிக்காவை முழுமையாக கைவிட முடியவில்லை. ட்ரம்பின் பதவிக்காலம் முடியட்டும். அதற்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா செல்லலாம், அங்கும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்களே என்கிறார் மெரிலீ! 

Leave a Reply