முன்பதிவில் இதுவரை அவதார் 3 செய்துள்ள வசூல்..
சினிமா
உலகளவில் நம்பர் 1 பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்த திரைப்படமாக உள்ளது அவதார். 2009ல் வெளிவந்த இப்படத்தின் வசூல் சாதனையை இன்றும் எந்த திரைப்படத்திலும் முறியடிக்க முடியவில்லை.
இவ்வளவு ஏன் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான அவதார் இரண்டாம் பாகம் திரைப்படம் கூட முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாம் பாகம், 'அவதார்: Fire and Ash' வருகிற 19ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அவதார் 3ஆம் பாகத்திற்காக முன்பதிவு தொடங்கிவிட்டது. இதுவரை நடந்த முன்பதிவில் உலகளவில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமே ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது.






















