மேற்கு கரையில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு
கனடாவைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒரு கனடிய குழுவிற்கு, இஸ்ரேல் எல்லையில் இருந்து மேற்குக்கரை பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய முஸ்லிம்களுக்கான தேசிய பேரவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள், அந்த குழுவை “பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” எனக் குறிப்பிட்டு நுழைவு மறுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழுவினருக்கு மேற்கு கரையில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களை சந்திக்கும் திட்டம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு கரையில் யூத குடியேற்றங்களில் 764 புதிய வீடுகள் கட்டுவதற்கு அண்மையில் இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவில் ஐந்து லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு என்.டி.பி கட்சி உறுப்பினரும் இடம்பெற்றிருந்தனர்.
அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இன்று ஜோர்தான் திரும்பியுள்ளனர்.
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்த இஸ்ரேல் அரசின் நடவடிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த தீவிர கேள்விகளை எழுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.





















