லண்டனில் கடையை தீயிட்டு கொழுத்த முயன்ற நபருக்கு தமிழ் இளைஞன்
லண்டனில் தமிழர் ஒருவரின் கடைக்குள் புகுந்து தீயிட்டு எரிக்க முற்பட்ட நபர் ஒருவர் தாக்கப்படும் காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த காணொளியில்,
இளைஞர் ஒருவர் குறித்த கடையின் பணம் வழங்கும் பகுதியில் நின்று கொண்டிருக்கும் போது திடீரென உள்ளே நுழைந்த நபர் ஒருவர் குறித்த பகுதியில் பெற்றோலை ஊற்றி பற்ற வைக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது கடையில் இருந்த இளைஞன் சந்தேக நபரிடம் இருந்து தப்பி பின்னர் கடுமையாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இருவருக்கும் இடையே மோதல் இடம்பெறும் பிரிதொரு நபரும் குறித்த தமிழ் இளைஞனுடன் இணைந்து குறித்த சந்தேக நபரை மடக்கி பிடித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
குறித்த காணொளியின் படி தனிபட்ட தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெளிவாகின்றது.





















