ஐந்து நாட்களில் ரீ ரிலீஸான படையப்பா படம் செய்துள்ள வசூல்..
சினிமா
புதிதாக வெளிவரும் படங்களுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறது ரீ ரிலீஸ் ஆகும் படங்கள்.
கில்லி, சச்சின், அட்டகாசம் ஆகிய படங்கள் வசூலில் பட்டையை கிளப்பின. இதை தொடர்ந்து கடந்த வாரம் ரீ ரிலீஸான படையப்பா படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பை தந்தனர்.
இந்த நிலையில், ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் படையப்பா உலகளவில் ரூ. 16 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் மூன்று நாட்களில் ரூ. 15 கோடி வரை வசூல் வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் வசூல் குறைந்துள்ளது.
இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும், கில்லி ரீ ரிலீஸ் வசூல் சாதனையை படையப்பா முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






















